இனி தான் ஆட்டமே இருக்கு.... சுனில் கவாஸ்கர் கேட்ட கேள்விக்கு வைபவ் சூர்யவன்ஷி சொன்ன அந்த ஒரு விஷயத்தை பாருங்க....! தனி ஆளாய் நின்று ஆதிக்கம் செலுத்தனும்...!!!



vaibhav-suryavanshi-test-cricket-dream-gavaskar-interac

ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் கவனம் ஈர்த்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட் குறித்த தனது எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னை வெறும் டி20 வீரராக மட்டுமே பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற இந்த உரையாடல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாட மாட்டார்...! CSK அணி அதிரடி அறிவிப்பு! செம ஷாக்கில் ரசிகர்கள்!!!

தனது அதிரடி பேட்டிங் பாணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருந்தாது என்று பலர் கருதுவதாக வைபவ் குறிப்பிட்டார். ஆனால், டி20 போட்டிகளின் தேவைக்கு ஏற்பவே அந்த வகை அணுகுமுறையை பின்பற்றுவதாகவும் விளக்கம் அளித்தார்.

சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மாநில அணியில் நீண்ட காலமாக பயிற்சி பெற்று வருவதாகவும், நீளமான இன்னிங்ஸ்களை கட்டமைக்கும் திறனை வளர்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் களமிறங்குவதே தனது மிகப்பெரிய கனவு என்று வைபவ் தெரிவித்தார். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையான விஷயம் என்றாலும், எந்த அணிக்காக விளையாடினாலும் வெற்றியை தேடித்தரும் ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.

ஒரு போட்டியின் முடிவை தனியாக மாற்றும் திறன் கொண்ட வீரராக உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தும் வீரராக வேண்டும்

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகள் வரை தன்னுடைய ஆட்டத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று இளம் வீரர் தெரிவித்தார். வெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக அல்லாமல், முக்கிய தருணங்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரராக திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட்டை முழுமையாக ரசித்தபடி விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையாக உழைத்து வருவதாகவும், உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு முத்திரை பதிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் வைபவ் சூர்யவன்ஷி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: நான் இப்போதெல்லாம் பால் குடிக்கிறது இல்ல சார்! வைபவ் சூர்யவன்ஷி சொன்ன கூல் பதிலை பார்த்தீங்களா... மேடையிலேயே சிரித்த ரவி சாஸ்திரி! வைரலாகும் வீடியோ..!!!