BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உபியில் கொடூரம்... "கோவிலில் இரத்தக்கறை..." 12 வயது தலித் சிறுமி பலாத்காரம்.!! போலீஸ் விசாரணை.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் சிறுமி கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கேராகர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 வயது தலித் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டு கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பாட்டிருக்கிறார். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற நபர் அவரை தாக்கி காயங்களையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
आगरा (Uttar Pradesh ) में महज 12 साल की बच्ची, दलित समाज की, रात को सो रही थी अपने घर में... और तभी, एक दरिंदा आया और उसे उठा ले गयाhttps://t.co/laVT7BkMtL
— Madan Mohan Soni - (आगरा वासी) (@madanjournalist) April 18, 2025
பெற்றோர் புகார்
இந்நிலையில் காயங்களுடன் வீடு திரும்பிய சிறுமி அழுது கொண்டே தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் கோவில் அருகே இரத்தக்கரைகள் இருப்பதாக ஊர் பொதுமக்களும் காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "தனிமையில் பல நாள் உறவு..." கைவிட்ட உயிர் காதலன்.!! நர்சுக்கு நேர்ந்த சோக முடிவு.!!
போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
இதனையடுத்து கற்பழிப்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் அந்த நபர் குறித்த காட்சிகள் பதிவாகி இருப்பதால் அதன் அடிப்படையிலும் தீவிரமாக தேடி வருகின்றனர். தலித் சிறுமி கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அப்பாவி பெண்கள் தான் டார்கெட்..." கால் சென்டர் பெயரில் ஆபாச ஸ்டூடியோ.!! பல லட்சம் வியாபாரம்.!! தட்டி தூக்கிய சைபர் கிரைம்.!