BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"தனிமையில் பல நாள் உறவு..." கைவிட்ட உயிர் காதலன்.!! நர்சுக்கு நேர்ந்த சோக முடிவு.!!
தெலுங்கானா மாநிலத்தில் திருமண ஆசை காட்டி தன்னுடன் பலமுறை உறவு கொண்ட காதலன் வேறொரு பெண்ணை மணந்ததால் விரக்தியடைந்த அரசு மருத்துவமனை செவிலியர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மலர்ந்த காதல்
தெலுங்கானா மாநிலத்திலுள்ள பொக்கனுந்தலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லீஸ்வரி. செவிலியர் பட்டதாரியான இவர் ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்திருக்கிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது கிராமத்தைச் சேர்ந்த ஜனா ரெட்டி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். மேலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையிலும் சந்தித்து வந்துள்ளனர். ஜனா ரெட்டி தனது காதலி மல்லீஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

வேறு பெண்ணுடன் திருமணம்
மல்லீஸ்வரி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜனா ரெட்டி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர் பார்த்த பெண்ணையே ஜனா ரெட்டி திருமணம் செய்திருக்கிறார். இது குறித்து மல்லீஸ்வரி கேட்டபோது தனது பெற்றோர் பேச்சை மீறி எதையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் மல்லீஸ்வரி.
இதையும் படிங்க: "அப்பாவி பெண்கள் தான் டார்கெட்..." கால் சென்டர் பெயரில் ஆபாச ஸ்டூடியோ.!! பல லட்சம் வியாபாரம்.!! தட்டி தூக்கிய சைபர் கிரைம்.!
விஷ ஊசி போட்டு தற்கொலை
உயிருக்கு உயிராக நேசித்த காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த மல்லீஸ்வரி விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மல்லீஸ்வரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவரது காதலன் ஜனா ரெட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் வெறி.!! "கணவனை கொன்று பாம்பை கடிக்க விட்ட கொடூரம்..." மனைவி, காதலன் கைது.!!