ஆசிய கோப்பையில் அதிக ரன்களை குவித்துள்ள டாப்-10 வீரர்கள்...!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இந்த அணி வீரர்கள் துபாய் கிளம்பி சென்றுள்ளனர்.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 15–28) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த் தொடரின் முதல் போட்டியில், இலங்கையுடன் வங்கதேசம் மோதுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங் காங்குடன் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பரம எதிரிகளான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
2018 ஆசிய கோப்பையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுதான். 19ம் தேதி நடைபெறும்...
இதன் அடிப்படையில் ஆசிய கோப்பைகளில் இதுவரை அதிகம் ரன்களை எடுத்து வீரர்கள் பற்றி கீழே பார்க்கலாம்.
10.சோயப் மாலிக் -175 ரன்கள்
9.இன்சமம் உல் ஹக் -591 ரன்கள்
8.விராட் கோலி -613 ரன்கள்
7.அட்டப்பட்டு – 642 ரன்கள்
6.டி சில்வா -645 ரன்கள்
5.ஜெயவர்த்தனே -675 ரன்கள்
4.அர்ஜுனா ரணதுங்கா- 741 ரன்கள்
3.சச்சின் டெண்டுல்கர் – 971 ரன்கள்
2.குமார் சங்ககாரா ஆயிரத்து – 1075 ரன்கள்
1.சனத் ஜெயசூர்யா ஆயிரத்து -1220 ரன்கள்