தமிழகம் இந்தியா விளையாட்டு

இன்று களமிறங்கும் சென்னை சிங்கங்கள்! ஆரவாரத்துடன் காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்!

Summary:

today match CSK players

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாவிட்டாலும் சென்னை அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஐபில் போட்டியின் 12 வது சீசனில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ள நிலையில் இன்று ஐந்தாவது போட்டி நடைபெறவுள்ளது.  இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணி என்றாலே எந்த மைதானமாக இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் தோனியும் ரெய்னாவும் தான்.

csk 2019 க்கான பட முடிவு

இன்று நடைபெறும் ஐந்தாவது போட்டி டெல்லியில் இரவு 8 மணி தொடங்குகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடப்பதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். இதனால் இன்றும் சென்னை அணி அசத்தல் செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது:

1. சேன் வாட்சன்
2. அம்பத்தி ராயூடு
3. சுரேஷ் ரெய்னா
4. தோனி 
5. கேதர் ஜாதவ் 
6. டூவைன் பிராவோ
7. ஜடேஜா 
8. ஹர்பஜன் சிங்
9. தீபக் சாஹர்
10. ஷர்துல் தாகூர் 
11. இம்ரான் தாஹிர்


Advertisement