விளையாட்டு

அந்த போட்டியின் ஆட்டநாயகன் நடுவர் தான்... சேவாக் கலகல ட்வீட்.!

Summary:

The umpire who gave this short run should have been man of the match. Shewag twitt

13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது கடந்த சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அதில் இரு அணிகளும் 157 ரன்கள் எடுக்கவே சூப்பர் ஓவர் அமைக்க பெற்று டெல்லி அணி வெற்றி வாய்ப்பை தட்டி சென்றது. ஆனால் வெற்றி இலக்கை நோக்கி ஆடி கொண்டிருந்த பஞ்சாப் அணிக்கு 19 வது ஓவரில் நடுவர் கூறி முடிவால் வெற்றி இலக்கை பெற முடியாமல் போனது.

அதாவது 19 வது ஓவரில் மயங்க் அகர்வாலும், ஜார்டனும் இரு ரன்கள் ஓடினார்கள். ஆனால் ரன்களை முழுமையாக ஓடவில்லை எனக்கூறி நடுவர் பஞ்சாப் அணிக்கு ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார். ஆனால் தொலைக்காட்சி ரீ பிளேயில்  ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது.


நடுவரின் தவறான முடிவால் பஞ்சாப் அணி தேல்வி தழுவியது. இந்நிகழ்வுக்கு பல முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்திய அணியின்  முன்னாள் அதிரடி வீரர் சேவாக் , ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.


Advertisement