அட இந்த தம்பி தல தோனியை மிஞ்சிடுவாரோ அசத்தல் ஸ்டெம்பிங்; வைரலாகும் வீடியோ.!



thala dhoni - england vs iarland - stamping ben bocxes

தற்போது ஐபிஎல் சீசன் 12 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை சென்னை, டெல்லி, மும்பை அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் மும்பை, கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியின் முடிவு நான்காவது இடத்தை பிடிக்கும் அணி யார் என்பதை முடிவு செய்துவிடும்.

இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் தொடர் நிறைவடைய இன்னும் சில போட்டிகளே நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக உலகின் 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகிறது.

m.s dhoni

அந்த வகையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆட உள்ளது. அதற்கு முன்பாக ஒரே ஒரு நாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 42 ஓவரிலேயே 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ், பேட்டிங்கில் 61 ரன் எடுத்து அசத்தியதோடு, கீப்பிங் செய்த போது ஒரு நிதானமான அசத்தல் ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் ஈர்த்தார்.



 

அயர்லாந்தின் ஆண்ட்ரீவ் பல்பிரீனி 29 ரன்கள் எடுத்திருந்த போது, ஜோ டென்லி வீசிய பந்தில், பல்பிரீனி கிரீஸிலிருந்து காலை எடுக்கும் வரை பொறுமையாக இருந்து ஸ்டெம்பிங் செய்து அசத்தி உள்ளார். இந்த ஸ்டம்பிங் தல தோனியை ஞாபகபடுத்துவதாக உள்ளது என்று சிலரும் தல தோனியையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்றும் சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.