BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஓய்வை அறிவித்த உலகபுகழ்பெற்ற No.1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்... தோல்வியுடன் நெகிழ்ச்சி உரையாற்றி வெளியேற்றம்.!
ஸ்விட்சர்லாந்து நாட்டினை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (வயது 41). இவர் உலகப்புகழ்பெற்ற சிறந்த டென்னிஸ் வீரர்களில் முதன்மையானவர் ஆவார்.
தனது போட்டிக்களத்தில் வீரதீரமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ரோஜர், கலந்துகொண்ட பெரும்பாலான போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். இந்த நிலையில், இவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் லோவர் டென்னிஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்ட ரோஜர் தோல்வியுற்ற நிலையில், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்த நாள் எனக்கு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். எவ்வித வருத்தமும் எனக்கும் இல்லை" என்று கூறினார். ரோஜரின் முடிவு அவரது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.