2011 உலக கோப்பை வெற்றிக்கு பின்னணியில் சச்சின் தீட்டிய திட்டம்.! முடித்துவைத்த தோனி.! 9 ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்.

2011 உலக கோப்பை வெற்றிக்கு பின்னணியில் சச்சின் தீட்டிய திட்டம்.! முடித்துவைத்த தோனி.! 9 ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்.



Tendulkar Reveals It Was He Who Prompted MS Dhonis WC2011

2011 ஆம் ஆண்டு இலங்கை அணியுடனான உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், சுமார் 9 வருடங்கள் கழித்து இறுதி போட்டியில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் அதிரடி வீரர் சச்சின்.

இறுதி போட்டியில் 5 வீரராக யுவராஜ் களமிறங்க வேண்டிய இடத்தில் தோனி திடீரென களமிறங்கினார். யுவராஜ் சிறப்பாக விளையாடும்போது தோனி ஏன் திடீரெனெ களமிறங்கினார் என பல விமர்சங்கள் எழுந்தது. தோனி கேப்டன் என்பதால்தான் அவர் இஷ்டத்துக்கு முன்னதாகவே களமிறக்கியதாக பலர் விமர்சித்தனர்.

dhoni

ஆனால், இந்த சம்பவத்துக்கு பின்னணியில் சச்சின் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது நான்காவது விக்கெட்டுக்கு இடது கை பேட்ஸ்மான்  காம்பிர் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன் விராட்கோலி இருவரும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். இவர்களில் காம்பிர் அவுட் ஆனால் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜை இறக்கவேண்டும், ஒருவேளை விராட்கோலி அவுட் ஆனால் வலது கை பேட்ஸ்மேன் தோனியை இறக்கவேண்டும் என சச்சின் ஷேவாக்கிடம் அறிவுரை கூறியுள்ளார்.

பின்னர் இந்த தகவல் தோனிக்கு தெரிவிக்கப்பட்டு, மூவரும் அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனிடம் விவாதித்தனர். பயிற்சியாளரும் சம்மதம் தெரிவிக்க, விராட்கோலி ஆட்டம் இழந்தார். இதனால் நாங்கள் திட்டமிட்டபடி தோனி அந்த இடத்தில் இறங்கினர். மற்றபடி கேப்டன் என்பதற்காக தோனி முன்னதாகவே இறங்கவில்லை என சச்சின் கூறியுள்ளார்.

அவர்கள் திட்டமிட்டலின்படியே காம்பிர், தோனி இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். இந்திய அணி 28 ஆண்டுக்குப் பின் மீண்டும் உலக சாம்பியன் ஆனது.