விளையாட்டு

IPL2020: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் எவை.. வல்லுநர்கள் கருத்து!

Summary:

Teams will be in play off experts talk

ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள 2020 ஐபிஎல் டி20 தொடர் இன்று அபுதாபியில் துவங்கவுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடரின் முதல் சுற்றில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும்.

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேற வாய்ப்புள்ளன என கிரிக்கெட் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

சஞ்சய் மஞ்ரேக்கர்: MI, CSK, DC, SRH
இயான் பிஷப்: MI, CSK, DC, RCB
தீப்தாஸ் குப்தா: MI, RCB, CSK, KKR
கம்பீர்: MI, SRH, KIXP, DC/RR
டாம் மூடி: MI, DC, KIXP, SRH
அகார்கர்: MI, RR, KKR, CSK
சோப்ரா: MI, DC, CSK, RCB

இந்த கருத்து கணிப்பில் அனைவருமே தேர்வு செய்துள்ள அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே. கம்பீர் மற்றும் டாம் மூடி சென்னை அணியை தேர்வு செய்யவில்லை. டெல்லி கேப்பிடஸ் அணியை 5 பேரும் கோலி தலைமையிலான RCB அணியை இரண்டு பேருமே தேர்வு செய்துள்ளனர்.


Advertisement