விளையாட்டு

ஆசியா லெவன் vs உலக லெவன் அணிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு! 6 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு

Summary:

Team squad for asia XI vs World XI

பங்களாதேஷின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் 100 ஆவது பிறப்பு ஆண்டினை முன்னிட்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஆசிய லெலன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கான இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த போட்டிகள் வரும் மார்ச் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் டாக்காவில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆசிய லெவன் அணியில் இந்தியாவை சேர்ந்த விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், முகமது சமி, குல்தீப் யாதவ் ஆகியோரும் பங்களாதேஷ் அணியில் இருந்து தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், முஷ்தாபிசூர் ஆகியோரும் இலங்கையை சேர்ந்த பெரேரா, லமிச்சானே, மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான், முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாக்கிஸ்தான் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.


உலக லெவன் அணியில் டூப்ளஸிஸ், கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், பொல்லார்ட், டெய்லர், பெயர்ஸ்டோவ், பூரன், அடில் ரஷீத், காட்ரல், நிகிடி, டை, மெக்லனகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Advertisement