உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கூறிய வாழ்த்து- வைரலாகும் ட்வீட் பதிவு.

உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கூறிய வாழ்த்து- வைரலாகும் ட்வீட் பதிவு.


t20-cricket

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளது. இதன் இறுதி போட்டியானது வரும் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதயுள்ளது. இந்த இறுதி போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதியானதற்கு பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் ஆண் அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

T20 cricket

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதி சுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இறுதி போட்டியில் சாதிக்க வாழ்த்துக்கள் என்று கூறி பதிவிட்டுள்ளார்.