"சிறுநீர் கற்களை கரைக்க தினமும் 2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்" AI பதிலால் இணையத்தில் பரபரப்பு.!?



Netizens shocked about AI answer for kidney stones remedies

நவீன தொழில்நுட்பங்கள்
தற்போதுள்ள நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்த நவீன தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு நன்மையை தருகிறதோ, அதே அளவிற்கு தீமையையும் அளிக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம் இருக்கும் இடத்தில் அருகிலேயே இருக்கும் ஹோட்டல்கள், செல்லும் இடத்திற்கான வழிகள், மருத்துவ ஆலோசனை, உடல் உபாதைகளுக்கான மருந்துகள் போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக கூகுளில் நாம் தேடும் அனைத்திற்கான விடையும் சர்ச் ஜெனரேட்டிவ் இஞ்சின் என்ற AI தொழில்நுட்பத்தில் மூலம் கிடைத்து விடுகிறது. இதன் மூலம் கூகுளில் தேடப்படும் அனைத்துமே மிகவும் எளிமையாக கிடைப்பதோடு, விரிவாகவும், ஆழமாகவும் இருப்பதாக கூகுள் கூறி வருகிறது. ஆனால் இதற்கு மாற்றாக கூகுளில் தேடப்படும் ஒரு சில விஷயங்களுக்கான பதில்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் AI தொழில்நுட்பம் பதில் கூறி வருகிறது.

google

AI தொழில்நுட்பம் பற்றிய நெட்டிசனின் பதிவு

இவ்வாறிருக்க சமீபத்தில் எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் கூகுளில் உபயோகப்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது அப்பதிவில் கூகுளிடம் சிறுநீரக கற்களை எளிதாக வெளியேற்றுவது எப்படி என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த தொழில்நுட்பம் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை அதிகமாக அருந்த வேண்டும் என்று கூறியதோடு, தினமும் 2 லிட்டர் சிறுநீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

AI தொழில்நுட்பத்தின் பதில்

இப்பதிவு பலருக்கும் சிரிக்கும் விதமாக அமைந்தாலும் ஒரு சிலர் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் கூகுள் அளிக்கும் பதிலை நம்பி பல விஷயங்களை செய்து வருவதால் கூகுள் இவ்வாறான தகவல்களை அளிப்பது ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.