விளையாட்டு

அவர் ஓய்வு பெற்றதும் நான் ஐபிஎல் போட்டியே பார்ப்பதில்லை.. மகளிர் அணி விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா!

Summary:

Sushma verma stopped watching ipl after sachin retirement

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சுஷ்மா வர்மா. இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகையான சுஷ்மா, சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளையே பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார். தர்மசாலாவில் ஒருமுறை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் போட்டியை நேரில் பார்க்க சென்று சச்சின் விளையாடாததால் ஏமாற்றம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனியையும் மிகவும் பிடிக்கும். அவரை ஒருமுறை சந்தித்து நானும் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் தான் என அறிமுகம் செய்துகொண்டேன்.

அப்போது தோனி என்னிடம் மேலும் சிறப்பாக விளையாடுமாறு வாழ்த்தினார். தோனியின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சுஷ்மா வர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement