
Suresh raina tweet about IPL
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரசால் நாளுக்குநாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தற்போதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில், பிசிசிஐ இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடத்த முடிவுசெய்து, அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனால் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சின்ன தல சுரேஷ் ரெய்னா உற்சாகத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் , சென்னை அணி மற்றும் ரசிகர்களுடன், இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன். என்னால் காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement