இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரெய்னாவிற்கு விபத்தா?? சுரேஷ் ரெய்னா வெளியிட்ட அறிவிப்பு!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரெய்னாவிற்கு விபத்தா?? சுரேஷ் ரெய்னா வெளியிட்ட அறிவிப்பு!!


suresh-raina-talk-about-his-acccident


இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்  சுரேஷ் ரெய்னா. இந்திய அணியின் முன்னணி இடதுகை ஆட்டக்காரனான சுரேஷ் ரெய்னா இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.

இந்திய அணியின் மிகசிறந்த வீரராக பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், சுரேஷ் ரெய்னா சென்றகார் விபத்துக்குள்ளானதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாக பரவி வருகிறது. 

இதனால், சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இதனை அறிந்த சுரேஷ் ரெய்னா அந்த செய்தி முற்றிலும் போலியானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  

அந்த பதிவில், கடந்த சில நாட்களாக என் கார் விபத்துக்குள்ளானதாக தவறான செய்திகள் வலம் வருகிறது. இதனால் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இனிமேல், இப்படி தவறான தகவலை பதிவிட வேண்டாம் என்றும் தான் நலமாக தான்  இருக்கிறேன். இப்படி தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.