சுரேஷ் ரெய்னாவிற்கு அறுவை சிகிச்சை! மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவாரா?

சுரேஷ் ரெய்னாவிற்கு அறுவை சிகிச்சை! மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவாரா?


Suresh raina got surgery

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவிற்கு முழங்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சிறந்த பில்டர் ஆகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் பல வருடங்கள் விளையாடி வருகிறார்.

suresh raina

32 வயதான சுரேஷ் ரெய்னா சமீப காலமாக சரியான பார்மில் இல்லாததால் இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஆரம்ப காலத்தை போல அவரால் பில்டிங்கும் சரிவர செய்ய முடியவில்லை.

இந்நிலையில் நீண்டநாட்களாக மூட்டு பிரச்னையால் ரெய்னா அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆம்ஸ்டர்டமில் ரெய்னா ஆப்ரேஷன் செய்து கொண்டார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வர ரெய்னாவுக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.