விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தின் வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறிய சன் ரைசர்ஸ்.! புள்ளிபட்டியல் முழு விவரம்..!

Summary:

நேற்றைய வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


நேற்று நடந்த ஐபிஎல் T20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இதுவரை அணைத்து அணிகளும் 13 லீக் ஆட்டங்கள் ஆடியுள்ளனர். இன்னும் அணைத்து அணிகளுக்கும் தலா ஒரு லீக் போட்டி மட்டும் மீதி உள்ளது. இந்தநிலையில் 18 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரு மற்றும் டெல்லி அணி  14 புள்ளிகளுடன் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தின் வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் 12 புள்ளிகளுடன் 5வது, 6வது, மற்றும் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.


Advertisement