நான்காவது அணி எது? மிகுந்த எதிர்பார்ப்புடன் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்ளும் சன்ரைஸர்ஸ்!

நான்காவது அணி எது? மிகுந்த எதிர்பார்ப்புடன் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்ளும் சன்ரைஸர்ஸ்!


sunrisers against mumbai indians last league of ipl2020

ஐபிஎல் 2020 டி20 தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியும் 5 ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதுகின்றன. 

புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த வகையில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. 

IPL2020

தற்போது நான்காவது அணிக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியும் உள்ளன. 7 போட்டிகளில் வென்றுள்ள கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே 6 போட்டிகளில் வென்றுள்ள சன்ரைஸர்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். மேலும் சன்ரைஸர்ஸ் அணியின் நெட் ரன்ரேட் கொல்கத்தா அணியை விட மிக சிறப்பாக உள்ளது. எனவே இந்த போட்டியில் சன்ரைஸர்ஸ் வென்றால் அந்த அணி நான்காவது அணியாக பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும், இல்லையெனில் கொல்கத்தா அணி முன்னேறும்.