விளையாட்டு Ipl 2019

17 ஓவர்கள் நின்ற கேப்டன் கோலி சந்தித்த பந்துகள், அடித்த பௌண்டரிகள் எத்தனை தெரியுமா? மீண்டும் மண்ணை கவ்வும் நிலையில் RCB!

Summary:

strange batting from kholi played very slowly

இன்று பெங்களூரில் நடைபெற்று வரும் 20 வது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணியிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இறங்கினர். பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல கேப்டன் கோலி மற்றும் பார்திவ் படேல் இறங்கினர்.

 

எப்பொழுதும் நீண்ட நேரம் அவுட்டாகாமல் ஆடும் பார்திவ் படேல் இன்று இரண்டாவது ஓவரிலே மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் சரியான இடைவெளியில் சரிய துவங்கின. ஒரு முனையில் கேப்டன் கோலி வெறும் சிங்கிள் மட்டுமே அடித்துக்கொண்டு புதிதாக யாரும் வீரர்களை அதிரடியாக ஆடும்படி கூறிவந்தார். 

அவர்களும் ஆளுக்கு ஒரு சில சிக்ஸர், பௌண்டரிகள் அடித்து அடுத்தடுத்து அவுட்டாகினர். கோலி இரண்டாவது ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ஒரு நான்கு அடித்தார். அதுவும் ஆப் சைடில் எட்ஜ் ஆகி சென்ற பந்து. அதற்கு பிறகு 16 ஆவது ஓவர் வரை கோலி ஒரு பௌண்டரி அடிக்க கூட முயற்சி செய்யவில்லை, பொறுமையாக வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்து வந்தார். 

கடைசி நேரத்தில் அடித்துக்கொள்ளலாம் என பொறுமையாக ஆடிவந்த கோலி லாமிச்சனே வீசிய 17 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அதுவரை அமைதியாக இருந்த பெங்களூரு ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். அனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரிலே ரபடா வீசிய முதல் பந்தில் கோலி தூக்கி அடித்து கேட்ச் ஆகி அவுட்டானார். 

துவக்க ஆட்டக்காரராக இறங்கி 17 ஓவர்கள் வரை காலத்தில் நின்ற கோலி வெறும் 33 பந்துகள் மட்டுமே சந்தித்து 41 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு நான்கு மற்றும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அடங்கும். T20 போட்டியில் கோலி இவ்வளவு பொறுமையாக அடியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடைசியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியை அதற்குள் கட்டுப்படுத்தி முதல் வெற்றியை பெங்களூரு அணி பெறுமா என பொறுத்திருந்து பாப்போம்.


Advertisement