இந்தியா விளையாட்டு

கடும் பசியில் வெற்றியை சுவைக்காத சன்ரைசர்ஸ் அணி.! சமபலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இன்றைய முதல் ஆட்டம்.!

Summary:

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. அ

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 3:30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதேபோல் 15-வது லீக் ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு  நடைபெறவுள்ளது. இன்று நடக்கும் முதல் இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப்  அணியும் மோதுகிறது.

இந்த சீசனில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணி ஐதராபாத் சன்ரைசர்ஸ் தான். சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 13 ரன் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. 

சன்ரைசர்ஸ் அணியின் மிடில் வரிசை பேட்டிங் சொதப்பலும், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இல்லாததும் அந்த அணியின் பின்னடைவுக்கு காரணம் என பேசப்பட்டு வந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், அந்த அணியின் பவுலிங் அந்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம். இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றியை சுவைக்காத சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக போராடும். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்கவிருக்கும் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement