லேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா! ரசிகர்கள் உற்சாகம் - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு WC2019

லேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா! ரசிகர்கள் உற்சாகம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் நடுவே இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இரண்டாவது முறை மழை பெய்யும் முன்பு 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 63 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.

மழைக்கு பின்பு ஆட்டம் துவங்கியதிலிருந்து தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் மழையை பெறத் துவங்கியது. இம்ரான் தாகிர் சூழலில் சமாளிக்க முடியாமல் தான் வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 35 ஆவது ஓவரில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆப்கானிஸ்தான். அதிகபட்சமாக இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை முதலில் பேட்டிங் செய்து எடுக்கப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிகாக் மற்றும் ஆம்லா மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் எடுத்தனர். டிகாக் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து ஆடிய ஆம்லா 41 ரன்களும் பெலுக்வயோ 17 ரன்களும் எடுக்க தென்னாபிரிக்க அணி 29 ஆவது ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் உலகக்கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo