விளையாட்டு

இந்திய அணியின் அந்த 2 பேர் பந்து வீச்சை எதிர் கொள்ள பாகிஸ்தான் அணியே திணறும்.! சோயிப் மலிக் ஓப்பன் டாக்.!

Summary:

அனைத்து நாடு அணியிலும் மிக சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில பந்து வீச்சாள

அனைத்து நாடு அணியிலும் மிக சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில பந்து வீச்சாளர்களிடம் அந்த பேட்ஸ்மேன்கள் திணறுவது வழக்கம். அவ்வாறு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர்கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஓவர்களில், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் மிகவும் சிரமப்பட்டு விளையாடுவார்.

இதுகுறித்து சோயிப் மாலிக் சமீபத்தில் வெளியிட்ட பேட்டியில், ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும், எப்போதுமே பேட்ஸ்மேன்களின் பேட்டின் முனையை குறிவைத்து பந்துகளை வீசுவார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்கள் இருவரும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

பேட்டின் முனைகளை குறிவைத்து பந்து வீசும் ஒரு பௌலர்தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற முடியும். அவர்கள் இருவரின் பந்துகளும் அதிகமாக அவுட் ஸ்விங் ஆகும். அதனால் தான் நான் அவர்களின் பந்து வீச்சில் திணறினேன் என்றும் என்னைப்போன்று பாகிஸ்தான் அணியில் பல பேர் திணறினர் என்றும் அவர் கூறியுள்ளார்


Advertisement