சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஷிகர் தவான் !!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது. ஷிகர் தவான் என்பவர் தான் இந்திய அணியின் துவக்க வீரர் ஆவார். இவர் ஹாங்காங் அணியுடனான நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அந்த அரங்கில் ஒரு புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஹாங்காங் அணிக்கான அந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்றது. அதில் டாஸ் வென்ற அந்த ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதில் ஓபன் பேட்ஸ் மேன் ஷிகர் தவான் முதலில் களமிறங்கினார். களமிறங்கி சுமார் 127 ரன்கள் அடித்து ஷிகர் தவான் அந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு மிக பெரிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
இந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்து விட்டு தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸை தற்போது ஷிகர் தவான் பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.