13 வருடம் காத்திருந்து நேற்றைய போட்டியில் வச்சு செஞ்ச ஷிகார் தவான்! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! தவான் நெகிழ்ச்சி.

13 வருடம் காத்திருந்து நேற்றைய போட்டியில் வச்சு செஞ்ச ஷிகார் தவான்! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! தவான் நெகிழ்ச்சி.


Shikhar Dhawan first T20 century after 13 years

13 வருடங்கள் கழித்து இன்று தனது முதல் T20 சத்தத்தை அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தவான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக சென்னை அணி வீரர்கள் டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர். இதனை அடுத்து 180 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், தவான் ஒருபுறம் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றிபெற செய்தார்.

dhwan first ipl 100

58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் நின்றார். இதனை அடுத்து டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட தவான் நேற்றைய ஆட்டம் குறித்து பேசுகையில், "13 வருடங்கள் கழித்து இன்று முதல் சதத்தை அடித்து மிகவும் ஸ்பெஷல் ஆக உள்ளதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்".

13 வருடங்களில் தவான் அடித்த முதல் ஐபில் சதம் இதுவாகும்.