விளையாட்டு

2011 உலகக்கோப்பையை வென்றதும் தோனிக்கு இப்படி ஒரு சோதனையா..! வெளியான பகீர் தகவல்

Summary:

Selection committee planned to remove dhoni after 2011 wc

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரை வென்றது. 1983 ஆம் ஆண்டிற்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனி மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார். ஆனாலும் அதே ஆண்டில் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவதோடு மட்டுமல்லாமல் அணியிலிருந்தே நீக்கவும் தேர்வு குழு திட்டம் தீட்டியுள்ளது. 

அப்போதைய தேர்வுகுழு தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இருந்துள்ளார். தேர்வு குழுவின் இந்த முடிவுக்கு காரணம் அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது தான்.

ஆனால் அந்த சமயத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் உலகக்கோப்பை வாங்கிய அதே வருடத்தில் எப்படி கேப்டனை அணியிலிருந்து தூக்க முடியும். தோனி தொடர்ந்து இந்திய அணியில் இருக்க வேண்டும் என தேர்வு குழுவிடம் கண்டிப்பாக கூறியுள்ளார்.


Advertisement