இது நம்ம நடராஜனா, இல்ல சேலத்து ஜெமினா? ஆத்தாடி என்னா ஒரு தாறுமாறு வரவேற்பு!

இது நம்ம நடராஜனா, இல்ல சேலத்து ஜெமினா? ஆத்தாடி என்னா ஒரு தாறுமாறு வரவேற்பு!


salem-people-welcomed-player-natarajan

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த த.நடராஜன் இந்திய அணிக்கு பிரமாதமாக ஆடி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடி அந்த அணிக்கு பெருமை சேர்த்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனின் பங்களிப்பு ஹைதராபாத்திற்கு பெரிய அளவில் இருந்தது . அதுமட்டுமின்றி கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர் துல்லியமாக வீசி எதிரணியை திணறடித்தார். நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

natarajan

டி.நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். பிறகு டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு இந்திய அளவில் ஏரளமான ரசிகர்கள் பெருகினர்.

தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி தமிழகம் திரும்பி உள்ள நடராஜனுக்கு சேலத்தில் சின்னப்பம்பட்டி கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சாரட் வண்டியில் மிதந்தபடி கோட் அணிந்து வந்த நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர்.