விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் மரணம்

Summary:

Sachin coach dead

கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் இன்று மும்பையில் மரணமடைந்தார். 

16 வயதில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த். பல்வேறு சாதனைகளை படைத்த சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையின் சிற்பி இவர் தான் என்ற பெருமைக்குரியவர் ரமாகாந்த். 

87 வயதான ரமாகாந்த், மும்பை சிவாஜி பார்க் பகுதியில் வசித்து வந்தார். சரித்திரத்தில் இடம்பிடித்த ரமாகாந்த் வயது முதிர்வு காரணமாக இன்று புதன்கிழமை இந்த உலகை விட்டு பிரிந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக நோய்வாய்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement