கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை உயரிய விருதால் கௌரவப்படுத்திய ஐசிசி! ரசிகர்கள் உற்சாகம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை உயரிய விருதால் கௌரவப்படுத்திய ஐசிசி! ரசிகர்கள் உற்சாகம்



Sachin awarded the icc hall of fame

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக 20 வருடங்களுக்கும் மேலாக நீங்கா இடம் பிடித்து இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார் சச்சின். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்களை விளாசி எட்டாத உயரத்தில் உள்ளார்.

Sachin tendulkar

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தற்போது ஐசிசி உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார் அவருக்கு தற்பொழுது ஐசிசியின் சார்பாக ஐசிசியின் உயரிய விருதான ICC hall of fame வழங்கப்பட்டுள்ளது.

Sachin tendulkar

நேற்று லண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை ஐசிசி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கியது. இவருடன் சேர்த்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டிற்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

 

ஐசிசியின் இந்த உயரிய விருதினை இதுவரை இந்திய வீரர்கள் கவாஸ்கர், பிஷின்சிங் பேடி, கபில்தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் பெற்றுள்ளனர்.