ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி.. ஐபிஎல் தொடருக்கு முன் அதிர்ச்சி!rr-fielding-coach-tested-positive-ahead-of-ipl2020

ஐபிஎல் 2020 தொடர் துவங்குவதற்கு முன்னதாக யூஏஇ செல்லும் அனைத்து வீரர்கள் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் போன்ற அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந் யாக்னிக்கிற்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சோதனை அவரது சொந்த ஊரில் நடைபெற்றுள்ளது. 

Ipl 2020

அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக பயிற்சியாளர் திஷாந் யாக்னியுடன் கடந்த 10 நாட்களாக எந்த வீரர்களும் தொடர்பில் இல்லை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திஷாந், "பிசிசிஐ நெறிமுறைகளின்படி 14 நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.