சொந்த மண்ணில் சாதிக்குமா பெங்களூரு..?!! லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியுடன் இன்று மோதல்..!!
இன்று நடைபெறும் 15 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கொல்கத்தாவில் நடந்த 2 வது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டில் வெற்றி பெற அந்த அணியினர் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுடன் தலா 1 வெற்றியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. கடந்த போட்டியில் ஐதராபாத் அணியை 121 ரன்களில் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ள அந்த அணி அதே உத்வேகத்துடன் களமிறங்கும்.
சிறிய மைதானம் மற்றும் உலக தரம் வாய்ந்த வீரர்களுடன் இரு அணிகளும் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.