தோணி, கோலி செய்யாததை ஒரு பார்ட் டைம் கேப்டனாக செய்து முடித்த ரோஹித்!



Rohit sharma did a new record in t20 match history

இந்திய அணியின் மிக சிறந்த கேப்டன் நம்ம தல தோனி. தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட்கோலி. இந்நிலையில் தோனி மற்றும் விராட்கோலி இருவராலும் செய்ய முடியாததை ஒரு பார்ட் டைம் கேப்டனாக இருந்து சாதித்துள்ளார் ரோஹித் சர்மா.

விராட் கோலி தலைசிறந்த வீரராக இருந்தாலும் அவரது கேப்டன்சியின் மீது பல விமர்சனங்கள் வருகின்றன. கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

dhoni kohli rohit

ஒவொரு முறை தனக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார் ரோஹித் சர்மா. அவரது கேப்டன்சியில் நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மா வெற்றிகளை குவிக்கும்போதெல்லாம் அவரை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தவண்ணம் தான் உள்ளன.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 தொடரை ஒயிட் வாஷ் செய்தது ரோஹித் தலைமையிலான இந்திய அணி. எதிரணியை ஒயிட் வாஷ் செய்தது இது இரண்டாவது முறையாகும். ஆனால் தோணியோ, விராட்கோலியோ இதுவரை எதிர் அணியை தொடர்ந்து இரண்டு முறை ஒயிட் வாஷ் செய்தது இல்லை.

dhoni kohli rohit

இந்த பட்டியலில் 5 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது முதலிடத்திலும் 3 முறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.