தலைவா.. இத்தனை வருடங்களுக்கு பிறகும் உங்க ஸ்டைலும், அழகும் மாறவே இல்லை... கேப்டனாக கலக்கும் சச்சின்.!

தலைவா.. இத்தனை வருடங்களுக்கு பிறகும் உங்க ஸ்டைலும், அழகும் மாறவே இல்லை... கேப்டனாக கலக்கும் சச்சின்.!


road-safety-awareness-match

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் சாலை பாதுகாப்பு டி20 லீக் தொடர் கான்பூரில் நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து,நீயுசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நீயுசிலந்து லெஜண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக இந்தியா லெஜெண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கரும், விக்கெட் கீப்பருமான நமன் ஓஜாவும் கலமிறங்கி ஆடிவருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தகுந்தாற்போல சச்சின் டெண்டுல்கரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.