விளையாட்டு

என்ன.. இதுதான் காரணமா? தல தோனியின் சம்பளம் குறைப்பு! எவ்வளவு பார்த்தீங்களா! யாரும் எதிர்பாராத அதிரடி டுவிஸ்ட்.!

Summary:

என்ன.. இதுதான் காரணமா? தல தோனியின் சம்பளம் குறைப்பு! எவ்வளவு பார்த்தீங்களா! யாரும் எதிர்பாராத அதிரடி டுவிஸ்ட்.!

2021 ஆம் ஆண்டு 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னை  அணியின் சார்பில் கேப்டன் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் முதன்மை தேர்வாக எம்.எஸ்.தோனி இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம்  கொடுக்கப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்ந்து தோனி இரண்டாவது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.12 கோடி மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தோனியின் சம்பளம் குறைக்கப்பட்டதற்கு காரணம், அவருக்கு வயதாகிவிட்டதால் அவர் அடுத்த ஆண்டு ஓய்வை அறிவிக்கலாம். மேலும் தோனியே தன்னை தக்கவைக்க வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தாராம்.  ஆனால் அதற்கு உடன்படாத சிஎஸ்கே அணி சம்பளத்தை குறைத்து தோனியை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

 

 


Advertisement