விளையாட்டு

ரெடியா இரு! எப்போ வேணுனாலும் கூப்பிடுவோம்! சென்னை அணி வீரருக்கு வாய்ப்பு?

Summary:

Ravi shasthri said to deepak sakar to be ready for world cup match

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி சிறப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இட்டதில் இல்லது. இந்நிலையில் நாளைய ஆட்டத்தில் வலுவான நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணு வீரர் தீபக் சாகர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். பேட்டியாளர்களை சந்தித்த அவர் தான் இந்தியா திரும்பும் முன் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் சந்தித்தேன் என்றும் குறிப்பாக ரவி சாஸ்த்ரி அவர்களையும் சந்தித்தேன் என கூறினார்.

மேலும், ரவி சார் தன்னிடம் ரெடியாக இரு, இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் எநேரத்திலும் உன்னை இங்கிலாந்துக்கு கூப்பிடுவோம் என கூறியதாக சாகர் கூறியுள்ளார். மேலும், தனது பந்து வீச்சை ரவி சார் பாராட்டியதாவும் சாகர் கூறியுள்ளார்.


Advertisement