வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
ஆப்கான் அணி கேப்டன் ரஷீத் கான் எடுத்த திடீர் முடிவு..!! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை திடீரென ராஜினா செய்துள்ளார் ஆப்கான் அணி வீரர் ரஷீத் கான்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. உலகக்கோப்பை போட்டி தொடங்க இருப்பதை முன்னிட்டு இந்தியா உட்பட ஒவ்வொரு நாடும் தங்களது கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அணியின் கேப்டனாக இளம் வீரர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், தனது கேப்டன் பதவியை ராஜினா செய்வதாக கூறி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஷீத் கான்.
"ஆப்கான் அணியின் கேப்டன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற காரணத்தினாலும் உலகக்கோப்பை அணிக்கான தேர்வு விவகாரத்தில் பங்கேற்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஆனால் என்னுடைய கருத்தை கேட்காமலேயே வீரர்களின் தேர்வு நடைபெற்றுள்ளது.
இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். ஒரு வீரனாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமை" என ரஷீத் கான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளார்.