ஆன்லைனில் பிரியாணி ஆடர்.. ஹைதராபாத் அணியை ட்விட்டரில் கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. வைரலாகும் பதிவு.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் அணியை கலாய்க்கும் விதமாக பதிவிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


rajasthan-royals-sun-risers-trolls-hyderabad-after-epic-win

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் அணியை கலாய்க்கும் விதமாக பதிவிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் ராஜஸ்தான் அணி வீரர்களான டெவாட்டியா மற்றும் பராக் ஆகியோர் சிறப்பாக ஆடி த்ரில் வெற்றி பெற உதவினர்.

Rajesthan rayals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் அணியை கலாய்க்கும் விதமாக, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான  சோமாட்டோவை இணைத்து, 'எங்களுக்கு பெரிய ஹைதராபாத் பிரியாணி தற்போது தேவைப்படுகிறது' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.