அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!
CSK-வின் அடுத்த பயிற்சியாளர் ரெய்னா? இணையத்தில் வைரலாகும் பேட்டி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மனம் திறந்து பேசியுள்ளார். தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சமீபத்தில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதனிடையே சிஎஸ்கே அணியுடன் நீண்ட காலம் இணைந்து விளையாடிய சுரேஷ் ரெய்னா, அந்த அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். குறிப்பாக சென்னை அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு காரணமாக, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி வரவேற்பு உள்ளது.
இதையும் படிங்க: ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை.. ஒரே போட்டியில் 2 உலக சாதனைகள்!
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தன்னை தலைமை பயிற்சியாளராக பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து அணி நிர்வாகத்திடம் பேசியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒருவேளை அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியுடனான தனது உறவு குறித்தும் பேசிய ரெய்னா, “சிஎஸ்கே அணி எனக்கு மிகவும் நெருக்கமானது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், எதிர்காலத்தில் பயிற்சியாளர் பொறுப்பில் சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ரெய்னாவுக்கு, அணியின் சூழல் மற்றும் செயல்பாடுகள் குறித்து நல்ல அனுபவம் உள்ளது. எனவே, அவர் எதிர்காலத்தில் பயிற்சியாளர் குழுவில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதனால், சிஎஸ்கேவின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.