உலகம் விளையாட்டு

பிரபல விளையாட்டு வீரரின் மரணத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்! ஆச்சரியமூட்டும் அதிர்ச்சி தகவல்!

Summary:

precdicted kobes death on 2012


பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோபே பிரையன்ட் அவரது மகள் கயானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் இருந்து அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் களபாஸஸ் மலைப்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்தது. அந்த ஹெலிகாப்டரில் பிரையன்ட் அவரது மகள் கியானா மற்றும் அவர்களுடன் பயணித்த மற்றவர்களும் உயிரிழந்தனர். 

பிரபல கூடைப்பந்து வீரர்க் கோப் பிரையிண்ட் 2 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக கூடைப்பந்து விளையாடி வந்தார்.

இந்நிலையில் கூடைப்பந்து வீரர்க் கோப் பிரையிண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் மரணமடைவார் என ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2012ம் ஆண்டு நம்பர் 14ம் தேதி டாட்நோசோ என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கோப் மரணம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் அவர் ஹெலிகாப்டர் விபத்தில்தான் சிக்கி தனது உயிரை விடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு அப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் கூறியபடியே அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 


Advertisement