கொரோனா இருப்பது தெரியாமல் கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த ரசிகர்.. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!

கொரோனா இருப்பது தெரியாமல் கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த ரசிகர்.. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!


paksitan-cricketer-fan-takes-selfie-not-aware-of-covid

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃபிற்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியாமல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர் ஒருவர் ட்விட்டரில் புலம்பி தள்ளியுள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் அவர்கள் இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்பும் ஒருவர்.

Haris rauf selfie

ஆனால் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய இவர் விதிகளை மீறி வெளியில் வந்துள்ளார். ஒரு பொது இடத்தில் இவரை பார்த்த முகம்மது ஷகாப் என்ற ரசிகர் அவருடன் செல்பி எடுத்துள்ளார்.

பின்னர் முகம்மது வீட்டிற்கு சென்றதும் ஹரிஸ் ஏன் இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்ளவில்லை என கூகுளில் தேடியுள்ளார். அப்போது தான் ஹரிஸிற்கு கொரோனா உறுதியானது அந்த ரசிகருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ட்விட்டரில் இதனை பகிர்ந்துள்ளார்.