விளையாட்டு

உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆடிய பிறகு பாக்கிஸ்தான் வீரர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசு!

Summary:

pakistan players will take family after india match

இந்த வாரம் துவங்க இருக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் அந்தந்த அணியின் நிர்வாகம் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் முக்கியமானது வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை கூடவே அழைத்து செல்வது தான்.

இந்த கட்டுப்பாட்டில் தற்போது பாக்கிஸ்தான் அணி வீரர்கள் சிக்கியுள்ளனர். இந்த மாதத்தில் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாக்கிஸ்தான் அணி நான்கு ஆட்டங்களில் படுதோல்வி அடைந்தது.

pakistan vs england 2019 க்கான பட முடிவு

இந்த தொடரின்போது பாக்கிஸ்தான் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை கூடவே அழைத்து சென்றனர். ஆனால் வீரர்களின் செய்லபாடுகள் அணியின் நிர்வாகத்திற்கு திருப்தியாக இல்லை. எனவே இந்த உலகக்கோப்பை தொடரில் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை கூடவே அழைத்து செல்ல பாக்கிஸ்தான் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் வீரர்கள் மிகவும் கவலைக்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து வரும் ஜூன்12-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு தங்கள் குடும்பத்தினரை அவர்களுடன் தங்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என வீரர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

pakistan players with family க்கான பட முடிவு

வீரர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த அணி நிர்வாகம், ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் அவர்களது குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியா உடனான போட்டிக்கு பாக்கிஸ்தான் அணி நிர்வாகம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.


Advertisement