திரும்ப வந்துட்டேனு சொல்லு! வெறித்தனமான பந்துவீச்சால் பாகிஸ்தானை மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்

திரும்ப வந்துட்டேனு சொல்லு! வெறித்தனமான பந்துவீச்சால் பாகிஸ்தானை மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்



pakistan-all-out-for-105-against-west-indies

உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை வெறும் 105 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்.

இங்கிலாந்தில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நாட்டிங்காமில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

wc2019

முதலில் பேட்டிங்கை துவங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்தே சரிவை சந்தித்தது. மூன்றாவது ஓவரில் இமாம் அவுட்டாக அலனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக சரிந்தது. ஹோல்டர், ரஸ்ஸல், தாமஸ் என வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

wc2019

பாகிஸ்தான் அணியின் பக்கர் ஷமாம் மற்றும் பாபர் ஷமாம் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 22 ஆவது ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


வெஸ்ட் இண்டீஸ் சார்பாக தாமஸ் அதிகபட்சமாக 4, ஹோல்டர் 3,  ரஸ்ஸல் 2, கோட்ரல் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.