அடிதடியில் ஈடுபட்ட ரசிகர்கள்! பாக் - ஆப்கன் போட்டியில் நடந்த திடீர் பரபரப்பு



Pak vs afg fans fight

உலக கோப்பை தொடரின் 36ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில்  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அரையிறுதிக்குள் நுழைய இந்த போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயம் பாகிஸ்தான் அணிக்கு இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

wc2019

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமான் முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் தங்களது திறமையான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ரன் வேகத்தையும் கட்டுப்படுத்தினர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தோற்றுவிடும் என்ற நிலை உருவானது.

45 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பீல்டிங்கில் செய்த பெரிய தவறுகளால் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

wc2019

இந்தப் போட்டியின் நடுவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ரசிகர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் இருந்த காவலர்கள் அவர்களை விலக்கிவிடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மேலும் ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.