தமிழ் கடவுள் பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய வீரத்தமிழன் நடராஜன்.!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.


ntarajan-hair-donate-in-palani-murugan-temple

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த த.நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடி அந்த அணிக்கு பெருமை சேர்த்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனின் பங்களிப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய அளவில் இருந்தது . அதுமட்டுமின்றி கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர் துல்லியமாக வீசி எதிரணியை திணறடித்தார். நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். 

natarajan

இதனையடுத்து டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு இந்திய அளவில் ஏரளமான ரசிகர்கள் பெருகினர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்துள்ளார் நடராஜன். பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தி பின்னர் ரோப் காரில் சென்று தரிசனம் செய்தார். அப்போது நடராஜனை கண்ட ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.