விளையாட்டு

முதலில் மிரட்டிய இந்தியா; பிறகு மிரட்டி பதுங்கிய நியூசிலாந்து! முடிவு என்னவாகும்?

Summary:

Newzland sets 158 target to india

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் டேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கடந்த போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் இல்லை.

ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4  விக்கெட்டுகளை இழந்து வெறும் 60 ரன்களே எடுத்திருந்தது. குருனல் பாண்டிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆனால் அடுத்து டெய்லருடன் ஜோடி சேர்ந்த கிராண்ட்கோம் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். சிக்சரும், புண்டரிகளும் பறந்ததுடன் அணியின் எண்ணிக்கையும் உயர துவங்கியது. சிறப்பாக ஆடிய கிராண்ட்கோம் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement