விளையாட்டு

ஐபிஎல் போட்டி: வெளியான முக்கிய தகவல்; பிசிசிஐ வெளியீடு.!

Summary:

New unnouncement about ipl test maach

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபில் T20 கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறுமா - நடைபெறாதா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-19 ஆம் தேதி நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வரும் ஜூலை 1ஆம் தேதி சனிக்கிழமை ஐபிஎல் நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும உறுப்பினர்கள், விளம்பரதாரர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம்  காணொளி காட்சி வழியாக நடைபெற உள்ளது என்று பிரிஜேஷ் படேல் இன்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான விதிமுறைகள் ஏற்கனவே பிசிசிஐ ஆல் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதனை ஐபிஎல் குழுவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குத் 
பயணச் செலவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவு   அனைத்தையும் அணி உரிமையாளர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாகவும் மேலும், சில முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் அணி உரிமையாளருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement