விளையாட்டு

IPL2020: புதிதாக என்னென்ன சாதனைகள் காத்திருக்கின்றன.. புள்ளிவிவரம் உள்ளே!

Summary:

New records to be expected in ipl2020

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. 8 அணிகள் பங்குபெறும் 13 ஆவது ஐபிஎல் சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க வீரர்கள் ஆவலுடன் உள்ளனர். அதில் எதிர்பார்க்கப்படும் முக்கியமான சாதனைகளின் பட்டியல் இதோ:

அதிக போட்டிகள்: தோனி இன்னும் 4 போட்டிகளில் விளையாடினால் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ரெய்னாவை(193) பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடிப்பார்.

150 விக்கெட்டுகள்: இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ட்வெய்ன் பிராவோ இடம்பெறுவார்.

5000 ரன்கள்: ரோகித் சர்மா 102, வார்னர் 294 ரன்கள் எடுத்தால் கோலி மற்றும் ரெய்னாவிற்கு பிறகு 5000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இணைவர்.

200 போட்டிகள்: தோனி 10, ரோகித் சர்மா 12 போட்டிகளில் விளையாடினால் 200 ஐபிஎல் போட்டிகளை கடந்துவிடுவர்.

அதிக விக்கெட்டுகள்: அமித் மிஷ்ரா இன்னும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.

50-50: இரண்டு போட்டிகளில் 50 ரன்களை கடந்தால் 50 முறை 50 ரன்களை கடந்த சாதனையை படைப்பார் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் 44 அரைசதம் 4 சதம் விளாசியுள்ளார்.

100 தோல்விகள்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 100 தோல்விகளை சந்திக்க உள்ள அணிகள் பட்டியலில் டெல்லி கேப்பிடஸ்(97), பஞ்சாப்(94), பெங்களூரு(92) என போட்டியில் உள்ளன.


Advertisement