
New player joins with chennai super kings
நடந்துவரும் ஐபில் போட்டிகளில் சென்னை அணி இதுவரை மூன்று வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. நேற்று மும்பை அணியுடன் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. மோசமான பேட்டிங் சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்றே கூறலாம்.
மேலும் சென்னை அணியின் பவுலிங்கும் சில நேரங்களில் சொதப்பதான் செய்கிறது. சென்னை அணியில் தென்னாப்ரிக்காவை சேர்ந்த லுங்கி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவரது பவுலிங் சென்னை அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என நம்பப்பட்ட நிலையில் காயம் காரணமாக லுங்கி இந்த ஐபில் போட்டியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் லுங்கியின் இடத்தை நிரப்ப நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர பவுலர் குக்ஜெலெஜின் சென்னை வந்துள்ளார். இவரது வருகை சென்னை அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள ஆட்டத்தில் குக்ஜெலெஜின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
Advertisement
Advertisement