இன்றைய போட்டியில் திடீரென களமிறங்கிய உள்ளூர் வீரர்! கெத்து காட்டவிருக்கும் இந்திய அணி!

இன்றைய போட்டியில் திடீரென களமிறங்கிய உள்ளூர் வீரர்! கெத்து காட்டவிருக்கும் இந்திய அணி!


new player in indian team


இன்று நடக்கும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணியில் குல்தீப் யாதவ்க்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் மயங் அகர்வால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். 

new player

இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருந்தார்.ஆனால் அவருக்கு திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் சபாஷ் நதீம் இன்றைய  டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த 2004ல் கேரளா அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக அறிமுகமானவர் சபாஷ் நதீம். இவர்  கடந்த 2015-16 மற்றும் 2016-17 ரஞ்சிக்கோப்பை தொடர்களில் பல விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.