அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகும் ஐபிஎல் 2019 ஏலம்! இதான் காரணமா?
அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகும் ஐபிஎல் 2019 ஏலம்! இதான் காரணமா?

ஐபில். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒரு வார்த்தை. ஐபில் போட்டிகளுக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஐபில் போட்டிகளுக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் அணைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபில் தொடர் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் ஐபில் 11 வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் ஐபில் 12 சீசன் அடுத்த வருடம் தொடங்க உள்ளது. ஆனால் அடுத்தவருடம் தேர்தல் வருவதால் ஐபில் போட்டிகள் இந்தியாவில் நடப்பது கேள்விக்குறிதான்.
மேலும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியே ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் நடத்தப்பட இருப்பதாக நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மேலும், சென்ற ஆண்டு வரை காலை 9 – மாலை 6 வரை ஏலம் நடக்கும். இம்முரை மதியம் 3 – 9.30 மணியாக மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஏலத்தை ரசிகர்கள் அனைவரும் தொலைகாட்சியில் கண்டு களிக்கலாம் என்பதற்காக தானம்.